தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களுல் ஒருவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘சர்தார்’. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘சர்தார் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த இரண்டாம் பாகத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி ‘சர்தார் 2’ படத்தின் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெரற்று வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக ‘சர்தார் 2’ படத்திற்கு வில்லனாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படம் பான் இந்திய படமாக உருவாக்க திட்டமிட்டுள்ள்ளனர்.