பூஜையுடன் தொடங்கவுள்ள ‘சர்தார் 2’ படம்.!

0
127

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களுல் ஒருவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘சர்தார்’. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘சர்தார் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த இரண்டாம் பாகத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படம் பான் இந்திய படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகையால், இதில் மற்ற மொழி நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here