‘நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் பெயர் சூட்ட வேண்டும்’ – சசிகுமார் வேண்டுகோள்!

0
98

Sasikumar Paid Tribute to Vijayakanth: மறைந்த கேப்டன் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகுமார், நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிச.28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நேரில் செல்ல முடியாத வெளிநாட்டில் இருந்த நடிகர்கள் வீடியோ மூலம் தங்களது இரங்கலை தெரிவித்தனர். பின்னர், சென்னை திரும்பிய நடிகர்கள் கேப்டனை அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.

அந்த வகையில், நேற்று (ஜன.04) நடிகர் சிவக்குமார், கார்த்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இல்லத்திற்கு இயக்குநரும், நடிகருமான சசிக்குமார் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், கேப்டனின் புகைப்படத்தை வணங்கி புகழ் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தை அடக்கம் செய்த இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “நடிகர் சங்க‌ கடனை அடைத்து சங்கத்தை மீட்டெடுத்த மிகப்பெரிய ஆளுமை கேப்டன் விஜயகாந்த். அவரது பெயரை புதிய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் மீது காலணி வீசிய விவகாரம்..! காவல் நிலையத்தில் புகார்.. தீவிர விசாரணையில் போலீஸ்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here