‘Sathamindri Muthamtha’ : இயக்குநர் குராஜ் தேவ் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘சத்தமின்றி முத்தம் தா’. இந்த படத்தில் ஸ்ரீகாந்த்திற்கு ஜோடியாக கன்னட நடிகை பிரியங்கா திம்மேஷ் நடிக்கிறார்.
மேலும், ஹரிஷ் பெரடி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜூபின் இசை அமைக்கிறார். மேலும், யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்டுள்ளார். தொடர்ந்து இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஸ்ரீகாந்த் இதுவரை நடிக்காத புதுவிதமான கதாபாத்திரத்தில், வித்தியாசமான அணுகு முறையில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ‘சத்தமின்றி முத்தம் தா’ படம் வருகிற மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.