என்னமா கண்ணு சௌக்கியமா?.. ரஜினியுடன் இணையும் சத்யராஜ்.. முடிவுக்கு வந்த சண்டைகள்..

0
81

‘Thalaivar 171’: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லோகேஷ் யுனிவர்ஸில் இருந்து இந்த படம் சற்று மாறுபட்ட படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ‘தலைவர் 171’ படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதன்படி, ‘தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது.

இந்தப் படம் போதைப்பொருளை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பது உறுதியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் கேரியரில் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும்.

‘தலைவர் 171’ படத்தில் ரஜினிக்கு எதிரான் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ‘தலைவர் 171’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மாஸ் லுக்கில் இருக்கும் ரஜினியின் கையில் தங்க வாட்ச்களுடன் கட்டப்பட்டு கைது செய்யப்பட்டது போல இருக்கிறது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து, இந்த ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் ‘கழுகு’ என சமூக வலைத்தளங்களில் பரவியது.

‘தலைவர் 171’ படத்தில் நடிக்க ஷாருக்கானை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அனுகியுள்ளார். ஆனால் அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் தற்போது ரன்வீர் சிங் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ‘தலைவர் 171’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல நடிகை ஷோபனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து படத்தில் ஸ்ருதிஹாசன் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ரஜினியுடன் நடிகர் சத்யராஜும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ரஜினியும், சத்யராஜும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றியடைந்தது. பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பேசாமல் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை. இது சினிமா வட்டாரங்களுக்கும் நல்லாவே தெரியும். இப்படி இருக்க தற்போது சத்யராஜ் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here