பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நடிக்கும் சீமான்..? உற்சாகத்தில் தம்பிகள்..!

0
123

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரம் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தின் டைட்டிலை லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன் என்பதை சுருக்கமாக ‘எல்.ஜ.சி’ என தலைப்பு வைக்கப்பட்டது. இந்த தலைப்பிற்கு பல்வேறு வகையில் பிரச்சினைகள் வந்தன.

முதலில் இயக்குநர் ஒருவர் இந்த ‘எல்.ஜ.சி’ தலைப்பு தனது எனவும் அந்த பெயரை பதிவு செய்து வைத்திருப்பதாக கூறி இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து LIC நிறுவனமானது தங்களது நிறுவனத்தில் பெயரை பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ் அனுப்பியது.

இந்த பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க மருபுறம் இந்த படத்தின் படபிடிப்புகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கியது. இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சீமான் நடிகராக முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

மேலும், இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக சீமான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயியாக சீமான் நடிப்பதாக தெரிகிறது. இதன் படப்பிடிப்பு வெள்ளியங்கிரியில் அனுமதி பெற்று நடைபெற்று வருகிறது.

முன்னதாக சீமான், நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசும்போது, ‘ என்னை பார்ப்பவர்கள் அனைவரும் ஏன் தாடி வைத்துள்ளீர்கள்? என கேள்வி கேட்டு வருகின்றனர். ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதால் அதற்காக தான் இந்த தாடி வைத்துள்ளேன்’ என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ‘பிரம்மயுகம்’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here