நடிகை ஷெரினாவுக்கு பாலியல் தொல்லை – கார் ஓட்டுநர் உள்பட இருவர் கைது..!

0
86

சூப்பர் மாடல் போட்டியில் பட்டம் பெற்றதன் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டவர் பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி ஷெரினா. இவர், ‘பிக் பாஸ் சீசன் -6’ ல் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் புகழ்பெற்றார். சமுத்திரகனி, தம்பி ராமையா நடித்த ‘வினோதய சித்தம்’ படத்தில் நடித்திருந்தார்.

சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். ஷெரினாவின் மேலாளர் கவுரி ஜெகநாதன் கடந்த மாதம் 20ஆம் தேதி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ஷெரினாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஷெரினாவுக்கு போன் மூலம் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுவதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் அண்ணாசாலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை ஷெரினாவின் கார் ஓட்டுநரான கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இளையராஜா ஆகியோரை மயிலாடுதுறையில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நடிகை ஷெரினா கார் ஓட்டுநர் கார்த்திக்கை சில பிரச்சினை காரணமாக வேலையில் இருந்து நீக்கியதாக தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக் தனது கூட்டாளி இளையராஜாவுடன் சேர்ந்து நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், போனில் கொலை மிரட்டல் விடுத்ததும் வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here