‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் நடிக்கும் ‘பர்த் மார்க்’ படம்..! வைரலாகும் ‘போர் தீருமா’ பாடல்..!

0
100

தமிழ் சினிமாவில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வரும் கதாபாத்திரமான ‘டான்ஸிங் ரோஸ்’ மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ஷபீர் கல்லராக்கல். இவர், தற்போது இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் திரில்லர் படமான ‘பர்த் மார்க்’ என்ற படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிர்னா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர். வரலட்சுமி உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், ‘பர்த் மார்க்’ திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘போர் தீருமா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்ட நிலையில் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நவின் எழுதியுள்ள இந்த பாடலை, சிபி ஶ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ‘நான் நம்பும் தத்துவம் என்னை சரியாக வழிநடத்தும்’ – இயக்குநர் பா.ரஞ்சித்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here