மகளை கதாநாயகியாக்க ரூ. 200 கோடி செலவு செய்த ஷாருக்கான்..

0
75

Shah Rukh Khan: ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்குநர் ஆக வேண்டும் என முயற்சி செய்து அதற்கான பயிற்சிகளில் எடுத்து வருகிறார். அவருடைய மகள் சுஹானா கான் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என விரும்புகிறார்.

இந்நிலையில், மகள் சுஹானா கானை ரூ.200 கோடி செலவு செய்து படத்தில் நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சுஜோய் கோஷ் இயக்கும் புதிய படத்தில் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்தை ஷாருக்கான் ரூ.200 கோடி செலவில் தயாரிக்க உள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதை கொண்ட இந்த படத்தில் தனது மகளின் நடிப்பு ரசிகர்களை கவர வேண்டும் என அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை ஷாருக்கான் உருவாக்க உள்ளார்.

இந்த படம் ரிலீசானதும் தனது மகளுக்கு அதிக சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புவதாவதாகவும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு கட்டாயம் இந்த படம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here