பாலிவுட் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரது மகள் நடிகை சுகானா கான். இவர், சோயா அக்தர் இயக்கத்தில் வெளியான ‘தி ஆர்ச்சீஸ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த ‘தி ஆர்ச்சீஸ்’ படம் ஓடிடி-ல் வெளியானது.
சுஜோய் கோஷ் இயக்கத்தில் உருவாகும் ‘கிங்’ படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சாருக்கானுடன் இணைந்து சுகானா கானும் இந்த ‘கிங்’ படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
அதற்கேற்ப தற்போது ஷாருக்கானும், சுகானாவும் இணைந்து ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளனர். அதில், இருவரும் ஜீப்பில் ஒன்றாக போஸ் கொடுத்து நிற்கின்றனர்.
இந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும், இந்த புகைப்படத்தில் மூலம் இருவரும் இணைந்து நடிப்பது உறுதி என ஒருபுறம் கூறி வருகின்றனர்.
ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இது குறித்து எந்த பதிலும் வெளியாகவில்லை. தற்போது, இந்த புகைப்படம் மட்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.