திகிலூட்டும் திரில்லர் படம் ‘சைத்தான்’.. பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியது..!

0
85

Shaitaan: ஹிந்தி இயக்குநர் விகாஸ் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா நடிக்கும் திரைப்படம் ‘சைத்தான்’. இந்த படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படம் கடந்த மார்ச் 8ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மாதவனின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது.

‘சைத்தான்’ படம் ரிலீஸாகிய முதல் நாளில் இந்தியாவில் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, படம் ரிலீஸாகி மூன்று நாட்கள் ஆன நிலையில், இந்த மூன்று நாட்களில் ‘சைத்தான்’ படத்தின் வசூல் 55.13 கோடி ரூபாயாக உயர்ந்தது.

மேலும், ‘சைத்தான்’ படம் ஹிந்தியில் மட்டும் ரிலீஸான நிலையில் 55.13 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் பான் இந்திய அளவில் ரிலீஸாகி இருந்தால் கட்டாயம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால், தற்போது ‘சைத்தான்’ படத்தின் வசூல் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், தற்போது படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

திகில் கலந்த திரில்லர் படமான ‘சைத்தான்’ வருகிற மே 3ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here