‘ஏன் இன்னும் உங்களுக்கு குழந்தை இல்லை?’: மாஸ் ரிப்ளை கொடுத்த சாந்தனு – கீர்த்தி..!

0
120

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே திரைத்துறையில் இருப்பவர் நடிகர் சாந்தனு. இவர், பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான அங்கீகாரம் சினிமா துறையில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘புளூ ஸ்டார்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் ஜோடியாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது நடிகர் சாந்தனு பேசுகையில், “குழந்தை பெற்றுக்கொள்ளாததால் நாங்கள் பல்வேறு வகையில் கஷ்டங்களைச் சந்தித்து வருகிறோம்.

ஏதேனும் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றால், அடுத்து உங்களுக்கு தான என குழந்தை பற்றி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். நாங்கள் இருவருமே தற்போது எங்கள் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறோம். அதே நேரத்தில் எது எது எந்த நேரத்தில் நடக்க வேண்டுமோ அது அது அந்த நேரத்தி நடக்கும்” என கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கீர்த்தி, “நாங்கள் குழந்தையே பெத்துக்க கூடாதுனு முடிவு எடுக்கவில்லை. எது வரவேண்டுமோ அது சரியான நேரத்தில் வரும். உங்களது வீட்டில் நடப்பதை நீங்கள் பாருங்கள், எங்கள் வீட்டில் நடப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என தனது ஆதங்கை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here