பத்ம விபூஷன் விருது பெற்ற சிரஞ்சீவி: நேரில் வாழ்த்து கூறிய சிவராஜ்குமார்!

0
142

Shiva Rajkumar met Chiranjeevi: இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான மெகாஸ்டார் சிரஞ்சீவி, சமீபத்தில் திரைப்படத் துறையில், குறிப்பாக டோலிவுட் திரையுலகில் சிறந்த சாதனைகளுக்காக மதிப்பிற்குரிய பத்ம விபூஷண் விருதைப் பெற்றார். அவர் விருது பெற்றதற்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் சிரஞ்சீவி வீட்டிற்குச் சென்று நேரில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகிற்குள் இருக்கும் நெருங்கிய உறவுகளை எடுத்துக்காட்டுகிறது. தொடர்ந்து, சிரஞ்சீவி, சிவராஜ்குமாருக்கு மதிய உணவை வழங்கினார்.

சிவராஜ்குமாருக்கு, சிரஞ்சீவி செய்த விருந்தோம்பல் மற்றும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றை சிரஞ்சீவி தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, சிவராஜ்குமாரின் வருகைக்கு சிரஞ்சீவி தனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here