‘நடிகர் திலகம்’ டைட்டிலுக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு..!

0
90

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள நடிகர் டோவினோ தாமஸ். மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மின்னல் முரளி’, ‘மாயநதி’, ‘லூக்கா’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதில், அவர் நடித்த ‘2018’ படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், தற்போது மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் ‘நடிகர் திலகம்’ என்ற பெயரில் புதிய படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை பிரபல வில்லன் நடிகர் லால் மகன் ஜீன் பால் லால் இயக்குகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப்படம் அரசியலுக்கு வர விரும்பும் நடிகரை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த கதையம்சமாக படம் உருவாகி வருகிறது.

மேலும், இந்த படத்திற்கு ‘நடிகர் திலகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் நடிகர் சிவாஜி கணேசனை அவமதிப்பதாக உள்ளது எனவே பெயரை மாற்றவேண்டும் என வற்புறுத்தி சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் சந்திரசேகரன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் மனு அளித்தார்.

இந்த நிலையில், இந்த படத்தின் பெயர் ‘நடிகர்’ என மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தின் புதிய டைட்டிலை நடிகர் பிரபு கொச்சியில் நடைபெற்ற தலைப்பு அறிவிப்பு விழாவில் கலந்து கொண்டு வெளியிட்டார். அப்போது படத்தின் பெயரை மாற்றியதற்காக படக்குழுவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலுநாச்சியராக களம் இறங்கும் ஸ்ருதி ஹாசன்..! மாபெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here