‘வரலாற்று சிறப்புமிக்க படத்தில் சிவராஜ் குமார்’ – அப்டேட் கொடுத்த இயக்குநர்!

0
64

Shiva Rajkumar: கன்னட சினிமாவில் முன்னணி நடிகர் சிவராஜ் குமார், சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இயக்குநர் ஹேமந்த் ராவ் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படம் பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ள வரலாற்று சிறப்புமிக்க படம் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் அப்டேட்டுகள் மற்றும் சுவாரசியமான தகவல்களை படத்தின் இயக்குநர் பகிர்ந்துள்ளார்.

அதன்படி இயக்குநர் ஹேமந்த் ராவ் கூறியதாவது, “ஒரு நடிகராக சிவராஜ் குமாரின் அனுபவம் மிகப்பெரியது. அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

ஒரு இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக பார்க்கிறேன்’” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here