வேலுநாச்சியராக களம் இறங்கும் ஸ்ருதி ஹாசன்..! மாபெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

0
69

நடிகர் கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ராஜேஷ் எம்.செல்வா. இவர், கமல்ஹாசனை வைத்தே ‘தூங்காவனம்’ என்ற படத்தையும், ‘கடாரம் கொண்டான்’, ‘இறை’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் கதையை வைத்து பிரமாண்டமாக படம் எடுக்க இயக்குநர் ராஜேஷ் திட்டமிட்டிருக்கிறார். இந்த வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வேலு நாச்சியார் கதாபாத்திரத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் ஸ்ருதி ஹாசனிடம் இருப்பதாகவும் ராஜேஷ் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக வெவ்வேறு விதமான கதைகளை தேர்ந்தெடுத்து வருவதால், வீரமங்கை வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதி ஹாசன் நிச்சயம் சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பீரியட் படங்களில் நடிக்க விரும்புவதாக ஸ்ருதி ஹாசன் கூறியிருக்கிறார். எனவே இந்த படத்தின் வாய்ப்பை தவறவிடாமல் கட்டாயம் வேலுநாச்சியாராக சிறப்பாக நடிப்பார் என கூறப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ‘இன்ஸ்டாகிராமில் நடிகை வித்யாபாலன் பெயரில் மோசடி’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here