சமந்தாவிற்கு பதிலாக சுருதி ஹாசன்?.. ஹாலிவுட் வாய்ப்பு பறிபோனதா?..

0
101

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சமீபகாலமாக படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். தற்போது அவர், தொடர் சிகிச்சைக்கு இடையே உடற்பயிற்சி மற்றும் பட தயாரிப்பு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் மீண்டும் சினிமாவில் நடிக்க சமந்தா முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. சமந்தா ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கும் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஆனால், தற்போது அந்த வாய்ப்பு சமந்தாவின் உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் பறிபோகியது. இந்த நிலையில் சமந்தா நடிக்க இருந்த ஹாலிவுட் படத்தில் அவருக்கு பதிலாக சுருதிஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த தகவல் வெளியாகி சமந்தா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: ஓடிடியில் ரிலீஸ் ஆனது ‘பைட் கிளப்’ படம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here