‘திருமணத்திற்கு பிறகு நான் இதை செய்யமாட்டேன்’ – உறுதிமொழி கொடுத்த சித்தார்த்

0
102

Siddharth – Aditi Rao: தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவர் சித்தார்த். கடந்த சில ஆண்டுகளாக சித்தார்த் நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மகாசமுத்திரம் என்ற படத்தில் இணைந்து நடித்ததில் இருந்து இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பின் இருவரும் காதலில் விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்து பொது இடங்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். முன்னதாக அதிதியின் பிறந்தநாள் அன்று “பிறந்தநாள் வாழ்த்துகள் பார்ட்னர்” என சித்தார்த் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து, புத்தாண்டன்றும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இருவரும் பகிர்ந்திருந்தனர். ஆனால், வெளிப்படையாக இருவரும் காதலிப்பதாக இன்று வரை கூறவில்லை. இந்த நிலையில் மார்ச்.27ஆம் தேதி இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது.

தெலுங்கானா மாநிலம் வனப்பர்த்தியில் உள்ள ஸ்ரீரங்கநாயக கோவிலில் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த பேச்சு குறித்து இருவரும் தஙக்ளது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் தெரிவித்தனர். அதன்படி, நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அதிதி ராவுக்கு, சித்தார்த் ஒரு முக்கிய உறுதிமொழி கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் விருப்பப்பட்டால் தொடர்ந்து சினிமாவில் நடிக்கலாம் நான் தடுக்கமாட்டேன் என உறுதிமொழி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here