‘லவ் இருக்கா?.. இல்லையா?..’ – சித்தார்த் பதிவிற்கு ரசிகர்கள் கமெண்ட்!

0
96

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இவர் நடிகராக மட்டும் இல்லாமல் ‘இடாகி’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்று வைத்து தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீப காலமாக சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும் பலவிதமாக பேசி வருகின்றனர். இருந்தபோதிலும், இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. இந்த சூழ்நிலையில், தற்போது நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதளத்தில் அதிதி ராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த பதிவின் கீழ் ‘லவ் இருக்கா? இல்லையா?’ என வடிவேலு பாணியில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அதிதி ராவ், நடிகர் சத்யதீப் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

நடிகை அதிதி ராவிற்கு ஏற்கனவே நடிகர் சத்யதீப் மிஸ்ராவுடன் திருமணம் நடந்த நிலையில் திருமணமான சில ஆண்டுகளுக்குப் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘ஆக்சனுக்கு தயாராகுங்கள்’ – வெளியானது ‘The Greatest of all Time’ செகண்ட் லுக்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here