‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்..’ – STR-க்கு பிறந்த நாள் வாழ்த்து..!’

0
96

‘HBD STR’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். ரசிகர்களால் STR என அழைக்கப்படும் இவர் இன்று 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் சிம்பு, சிறுவயதிலிருந்தே திரைத்துறை உலகில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்திய நிலையில், தனது 4 வயதில் தனது தந்தை டி.ராஜேந்திரனின் ‘உறவை காத்த கிளி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

திரையுலகில் சிம்புவின் பயணம் பன்முகத்தன்மையால் குறிக்கப்பட்டுள்ளது. காதல் நாயகன் முதல் ஆக்‌ஷன் ஹீரோ வரை பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது, சினிமா வாழ்வில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படம் ‘காதல் அழிவதில்லை’, இந்த படத்தில் அவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

நடிப்பு மட்டுமின்றி, திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கிய சிம்பு, பல வெற்றிப் படங்களை இயக்கி தயாரித்துள்ளார். இது, சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும். ஒரு பின்னணிப் பாடகராக, பல வெற்றிப் பாடல்களுக்குக் குரல் கொடுத்தவர், அவரது கலைத் திறனுக்கு மற்றொரு பரிமாணத்தைச் சேர்த்துள்ளார்.

சிம்பு தனது பரோபகார முயற்சிகளுக்காகவும் அறியப்படுகிறார் மற்றும் பல்வேறு சமூக காரணங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தொண்டு முயற்சிகளுக்குப் பங்களித்து வருகிறார். முக்கியமாக காவிரி பிரச்சினையின் போது சிம்பு குரல் கொடுத்த சம்பவம் பெரிதும் பேசப்பட்டது.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சிம்புவின் கெரியரில் எதிர்பாராத பல திருப்புமுனைகள் வந்தன. முக்கியமாக பீப் சாங்கிற்குப் பிறகு சிம்பு மீது இருந்த மவுஸ் குறையத் தொடங்கியது. அடுத்தடுத்து தோல்வி படங்கள், விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் என அடுக்கடுக்காக பல பிரச்சினைகளை அவர் சந்தித்து வந்தார்.

பின்னர், அவர் உடல் எடை அதிகரிப்பால் சினிமா வாய்ப்புகளும் குறையத் தொடங்கியன. இந்த சூழ்நிலையில், கொரோனா காலகட்டத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்தார். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இளமையான சிம்புவாக மாறினார்.

அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’, ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ என பல வெற்றிப் படங்களில் நடித்து மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டினார். சிம்புவின் ரீ எண்ட்ரியை அவரது ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். தொடர்ந்து சிம்பு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் ‘STR 48’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.

தொடர்ந்து, சிம்பு பல்வேறு படங்களில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில், இன்று சிம்புவின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள், திரைப்பிரலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும், சிம்பு ஒரு கலைஞனாக தொடர்ந்து சினிமாவில் பல பரிமாணங்களில் நடித்து, பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here