திரிஷாவுடன் மீண்டும் இணைய ராஜஸ்தான் செல்லும் சிம்பு..

0
159

Silambarasan TR: இயக்குநர் மணிரத்னம் நாயகன் படத்தை அடுத்து மீண்டும் கமலை வைத்து இயக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த ‘தக்லைப்’ படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் தற்போது ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகுவதாக தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியும் படத்தில் இருந்து விலகிய தகவல் வெளியானது. மேலும், துல்கர் சல்மானுக்குப் பதிலாக நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

பின்னர் சமீபத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான் மீண்டும் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது. மேலும், நடிகர் சிம்புவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் புதிய காதாபாத்திரத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது ‘தக் பைஃப்’ படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தானில் தொடங்கவுள்ளதாகவும், இதில், கமல், சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், நாசர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த ஷூட்டிங்கில் சிம்புவுக்கும் திரிஷாவுக்கும் காம்பினேஷன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஃபீல் இந்த படத்திலும் கிடைக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here