‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?.. ரசிகர்களின் கேள்விக்கு படக்குழு பதில்!

0
130

Singapore Salon: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தை ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகை அலங்கார நிபுணராக நடித்திருக்கிறார். அவருடன் இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்து ரசிகர்களிடம் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்திருந்தது. மேலும், இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வரவிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக படம் தள்ளிப்போனது.

இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும், விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘சிங்கப்பூர் சலூன்’ படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: கபில் தேவ் பிறந்த நாள்..! புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து கூறிய ‘லால் சலாம்’ படக்குழு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here