‘சிங்கப்பூர் சலூன்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
116

Singapore Salon: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தை ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகை அலங்கார நிபுணராக நடித்திருக்கிறார். அவருடன் இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.

சமீபத்தில் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் முதல் பாடலான ‘வந்தா மல’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், தற்போது ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் டிரைலர் நாளை (ஜன.18) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களில், ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் டிரைலர் நாளை (ஜன.18) வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராமர் கோவில் விவகாரம்: பாடகி சித்ராவின் வீடியோவுக்கு தொடரும் கண்டங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here