‘சிங்கப்பூர் சலூன்’: இரண்டு நாட்களின் வசூல் எவ்வளவு?..

0
115

Singapore Salon Collection: இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்த புதிய படம் ‘சிங்கப்பூர் சலூன்’. சிகை அலங்கார நிபுணராக ஆர்.ஜே.பாலாஜி நடித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.

‘சிங்கப்பூர் சலூன்’ படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில், ‘சிங்கப்பூர் சலூன்’ படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களில் இதுவரை 3.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து, பெரிய ‘ஹேர் ஸ்டைலிஸ்ட்’ ஆக வேண்டும் என துடிக்கும் இளைஞன் என்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறார் என்பதுதான் ‘சிங்கப்பூர் சலூன்’ படம். தொடர்ந்து இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here