வெளியானது ‘Singapore Saloon’ டிரைலர் – ரசிகர்கள் வரவேற்பு.!

0
120

Singapore Salon: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தை ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகை அலங்கார நிபுணராக நடித்திருக்கிறார். அவருடன் இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.

சமீபத்தில் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் முதல் பாடலான ‘வந்தா மல’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், தற்போது ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் டிரைலர் ஜன.18ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

அதன்படி இன்று ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் டிரைலர் வெளியானது. தொடர்ந்து, டிரைலருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘சிங்கப்பூர் சலூன்’ படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: ‘பாடகி சித்ராவுக்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன்’ – நடிகை குஷ்பூ ட்வீட்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here