கதாநாயகனாக அறிமுகமாகும் பாடகர் ஹரிஹரன்..!

0
56

மியூசிக் ஆல்பங்கள் மூலம் பிரபலமாக இருந்தவர் பாடகர் ஹரிஹரன். இவர், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான ரோஜா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார்.

பின்னர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தி, மராத்தி, ஒடியா என கிட்டத்தட்ட 10 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாயிருக்கிறார். பெரும்பாலும் பல வீடியோ ஆல்பங்களிலும் இவர் பாடியிருக்கிறார்.

கடந்த 2005ஆம் அண்டு இயக்குநர் ஜெயதேவி இயக்கத்தில் வெளியான பவர் ஆப் உமன் என்கிற படத்தில் குஷ்புவுடன் இணைந்து கதாநாயகனாகவும் நடித்திருந்தார் ஹரிஹரன்.

இந்த நிலையில் மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மலையாளத்திலும் இதேபோல தயா பாரதி என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் ஹரிஹரன். இந்த படத்தை கேஜி விஜயகுமார் என்பவர் இயக்குகிறார்.

மேலும், இந்த படத்தில் நாட்டுப்புறப்பாடகி நஞ்சியம்மா, அப்பாணி சரத், நேஹா சக்சேனா, வலிமை புகழ் தினேஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆதிவாசிகளின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here