‘விலங்குகளுக்காக விலங்குகளால் எடுக்கப்பட்ட படம் தான் அனிமல்’ – அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்த பாடகர் ஸ்ரீநிவாஸ்..!

0
89

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்த படம் அனிமல். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியாது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்த நிலையிலும் இந்த படம் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதற்கிடையே இந்த படம் கடந்த 26ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு இந்த படம் பல்வேறு விமர்சனங்களில் சிக்கி இருக்கிறது. மேலும், இந்த படத்தை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பல சினிமா பிரபலங்களும் இந்த படம் குறித்து தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ், அனிமல் படம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் கூறியிருப்பதாவது , “விலங்குகளுக்காக விலங்குகளால் எடுக்கப்பட்ட படம் தான் அனிமல். நான் உண்மையான விலங்குகளை அவமானப்படுத்தவில்லை” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நடிகை ராதிகா, தனது ‘X’ தளத்தில் அனிமல் படம் குறித்து விமர்சித்துள்ளார். அதில், “யாராவது ஒரு படத்தை பார்த்து எரிச்சல் அடைந்துள்ளீர்களா..? நான் குறிப்பிட்ட ஒரு படத்தை பார்த்து கடுமையாக கோபமடைந்துள்ளேன்” என பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவர் அனிமல் திரைப்படத்தை தான் இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார் என கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் அனிமல் படம் குறித்து விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here