‘Siren’: ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுஜாதா விஜய்குமார் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் சமீபத்தில் ரிலீஸாகி மாபெரும் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ‘அடி ஆத்தி’ படத்தின் வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது. பாடகர் அந்தோணி தாசன் மற்றும் சிந்தூரி விஷால் ஆகியோர் பாடிய இந்த பாடல் ஹிட்டடித்துள்ளது.
இந்த ‘சைரன்’ படம் பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.