‘சைரன்’ மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

0
90

‘Siren’: இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘சைரன்’. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுஜாதா விஜய்குமார் தயாரிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘சைரன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

‘சைரன்’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனைப் படக்குழு போஸ்டர் மூலம் பகிர்ந்துள்ளது.

இந்த நிலையில், ‘சைரன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவி தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ‘டீப் பேக் வீடியோ குறித்து விழிப்புணர்வு வேண்டும்’ – ராஷ்மிகா மந்தனா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here