வைரலாகும் ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தின் புதிய பாடல்..!

0
77

‘Siren Movie First Single’: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுஜாதா விஜய்குமார் தயாரிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ‘சைரன்’ படத்தின் முதல் பாடலான ‘நேற்று வரை’ பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று (ஜன.29) வெளியாககி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ‘சைரன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here