சைரன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!

0
147

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுஜாதா விஜய்குமார் தயாரிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, சைரன் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் சமூக வலைத்தளஙக்ளில் அறிவித்துள்ளது.

இந்தப் படம் வரும் 16ஆம் தேதி வெளியாகிறது. நடிகர் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here