செண்டிமெண்டா டச் பண்ண பாடல் ‘கண்ணம்மா கண்ணம்மா’.. ரசிகர்கள் வரவேற்பு..!

0
89

‘Siren Movie Second Single’: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுஜாதா விஜய்குமார் தயாரிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், தற்போது படத்தின் செகண்ட் சிங்கள் ‘கண்ணம்மா கண்ணம்மா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்பா மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் இந்த பாடல் செண்டிமெண்டாக மனதை டச் பண்ணதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here