வெளியானது விறுவிறுப்பான ‘சைரன்’ பட டிரைலர்..!

0
55

‘Siren Trailer’: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுஜாதா விஜய்குமார் தயாரிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடர்ந்து இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில், ‘சைரன்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெற்றது.

நிகழ்ச்சி முடிவில் ‘சைரன்’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான டிரைலருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here