‘Valentines Day Special’: மீண்டும் ரிலீஸாகும் ‘சீதா ராமம்’..!

0
123

Sita Ramam: நடிகர் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் நடிப்பில் 2022ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் ‘சீதா ராமம்’. இந்த திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

1964ஆம் ஆண்டு கால கட்ட பிண்ணனியில் உருவாக்கப்பட்ட இந்த காதல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் வரவேற்பு இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், ‘சீதா ராமம்’ திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து பல படங்கள் ரீரிலீஸ் ஆகி வரும் நிலையில் தற்போது ‘சீதா ராமம்’ படமும் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here