Amaran Exclusive Update: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
மேலும், இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த ‘அமரன்’ படமானது ஒரு இந்திய ராணுவ பின்னனியில் நடைபெறும் கதை என கூறப்படுகிறது. இதற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 20 நாட்களில் முடிவடைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘அமரன்’ படம் கட்டாயம் ஜூலை மாதம் ரிலீஸாகும் என சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது. மேலும், இது குறித்த அப்டேட் வருகிற ஏப்ரம் 14 அல்லது மே 9ஆம் தேதிகளில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.