கேப்டன் விஜயகாந்த உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத நடிகர்கள், பொதுமக்கள் அனைவரும் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் வீட்டிற்குச் சென்று விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் உருவபடத்திற்கு சிவகார்த்திகேயன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: ‘கேப்டன் செய்ததை நானும் செய்வேன்’..! விஜயகாந்த் சமாதி முன் புகழ் எடுத்த சபதம்..!