‘பைரி’ படம் பார்த்து படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்..!

0
118

‘Byri’: இயக்குநர் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘பைரி’. இந்த படத்தை டி.கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் வில்துரைராஜ் தயாரிக்கிறார்.

இந்த படம் புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து, இந்த படம் பிப்ரவரி 23ஆம் தேதி ரிலீஸானது.

‘பைரி’ படம் ரிலீஸான நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது. தொடர்ந்து இந்த படத்திற்கு திரைப்பிரபலங்களும் வாழ்த்து கூறி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது ‘பைரி’ படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக பைரி படத்தை பார்த்த நடிகருமான பாக்யராஜ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். தொடர்ந்து, இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here