SJ Suryah: தமிழில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம், ‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜப்பான்’ படங்கள். இதில் கடைசியாக கார்த்தி நடிப்பில் அவர் இயக்கி வெளியான ‘ஜப்பான்’ படம் அந்த அளவிற்கு ரசிகர்களிடம் சென்றடையவில்லை.
இந்த நிலையில் அடுத்தபடியாக ராஜூ முருகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தை ‘டாடா’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கிறது.
மேலும், இந்த படத்தின் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட விவரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் தொடர்ந்து நடித்த ‘மார்க் ஆண்டனி’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்கள் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தற்போது ‘இந்தியன்- 2’, ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ராஜூமுருகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.