மலையாள படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா.. யாருடன் தெரியுமா?

0
142

SJ Suryah: தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களே ஒதுங்கிப்போகும் அளவிற்கு தனது நடிப்பால் மிரட்டி வருபவர் எஸ்.ஜே.சூர்யா. நடிகராக வேண்டும் என சினிமாவில் நுழைந்து விஜய், அஜித் ஆகியோரை வைத்து படங்களை இயக்கி இயக்குநராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா.

ஆனால் தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தனது மிரட்டலான நடிப்பு, வாய்ஸ் என அனைத்திலும் தனக்கென ஒரு ஸ்டலை வைத்திருக்கிறார். கதாநாயகனாக நடித்ததை விட வில்லனாக தான் இவர் நடித்திருப்பது அதிகம்.

அந்த வரிசையில் ‘ஸ்பைடர்’, ‘மெர்சல்’, ‘மாநாடு’, ‘டான்’, ‘மார்க் ஆண்டனி’ சமீபத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட படங்கள் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். தமிழ் சினிமாவில் மட்டும் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யா, நானியின் 31ஆவது படமான ‘அடடே சுந்தரா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, மலையாளத்தில் இயக்குனர் விபின் தாஸ் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here