தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது அயலான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘SK 21’ படத்தில் நடித்து வருகிறார்.
இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
மேலும், இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது இந்திய ராணுவ பின்னனியில் நடைபெறும் கதை என கூறப்படுகிறது. இதற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் ஒரு வீடியோவையும் படக்குழு வெளியிட்டது.
அந்த வீடியோவில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தன்னை தயார்படுத்திய விதம், உடற்பயிற்சி செய்தது போன்றவைகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டைட்டில் ‘சோல்ஜர்’ என கூறப்படுகிறது. மேலும், இந்த டைட்டில் லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.