SK-வுக்கு போட்டி SK தானா?..  ஆடியோ ரைட்ஸ் விற்பனையில் பாகுபாடு.. என்ன காரணம்?..

0
131

‘SK 23’ : தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘SK 23’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்‌ஷன் கதையம்சமாக உருவாகி வருகிறது. 

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.  ‘SK 23’ படத்திற்கு ரூ.100 கோடிக்கும் மேல் செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் கெரியரில் இந்த படம் ஒரு அதிக பட்ஜெட்டில் உருவான மெகா ஹிட் படமாக அமையும் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் செல்ல இருப்பதால் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘SK 23’ படத்தின் ஆடியோ உரிமம் மட்டும் 16 கோடி ரூபாய்க்கு ஆதித்யா மியூசிக் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத், சிவகார்த்திகேயன் காம்போ என்பதால் படத்தின் பாடல்கள் ஹிட்டாகும் என முன்கூட்டியே அறிந்த நிறுவனம் பாடல் உரிமத்தை வாங்கியுள்ளது.

ஆனால், அதே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘அமரன்’ திரைப்படத்திற்கு ஆடியோ உரிமை 10 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  இதனையறிந்த நெட்டிசன்கள் எதற்காக இந்த பாகுபாடு? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here