‘SK 23’ – மேக்கிங் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர்.. ஒருவேளை இருக்குமோ?.. ரசிகர்கள் கேள்வி?..

0
127

‘SK 23’ : தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘SK 23’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு அதிரடி ஆக்‌ஷன் கதையம்சமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ருக்மணி வசந்த் என்ற கன்னட நடிகை நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘SK 23’ படத்திற்கு ரூ.100 கோடிக்கும் மேல் செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ‘SK 23’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் வித்யூத் ஜம்வால் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது படம் குறித்து புதிய அப்டேட்டை படத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், மானிட்டர் முன்பாக ஏ.ஆர்.முருகதாஸ் அமர்ந்திருக்கிறார், கேமரா முன்னாடி சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த புகைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அடந்த தாடியுடன் காணப்படுகிறார். இதனால், இது தான் சிவகார்த்திகேயனின் தோற்றம் எனவும் இதனை இயக்குநர் மறைமுகமாக ரசிகர்களுக்கு கூறியுள்ளார் எனவும் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here