‘SK 23’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘SK 23’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையம்சமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ருக்மணி வசந்த் என்ற கன்னட நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை VIT பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து, ‘SK 23’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ‘டான்ஸிங் ரோஸ்’ நடிகர் ஷபீர் கல்லராக்கல் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது ‘SK 23’ படத்தின் செகண்ட் ஷெட்யூல் பாண்டிச்சேரியில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதன் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதீதிவிரமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ‘SK 23’ படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான்கானை வைத்து இயக்கவுள்ளார்.