கேப்டன் விஜயகாந்த்திற்கு நினைவஞ்சலி செலுத்திய தென்னிந்திய நடிகர் சங்கம்..!

0
77

கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா துறையினர், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது வரை விஜயகாந்த்தின் நினைவிடத்தில் பொதுமக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு ஜனவரி 19ஆம் தேதி நினைவேந்தல் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி, இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், அனைத்து திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர். அனைவரும் விஜயகாந்த்தின் உருவபடத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: மிரட்டலான ‘கருடன்’ ஃபஸ்ட் லுக் போஸ்டர்.. மாஸ் லுக்கில் சூரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here