‘கேப்டன் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம்’ – தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு!

0
102

South Indian Artistes Association: நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிச.28ஆம் தேதி காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், தொண்டர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, நடிகர் சங்க கடனை அடைத்த கேப்டன் விஜயகாந்த் பெயரை நடிகர் சங்க கட்டடத்திற்கு வைக்க வேண்டும் என அரசியல் கட்சி பிரமுகர்களும், நடிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் வருகிற ஜனவரி 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் புகழையும், திறனையும், சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த, எங்கள் சங்கத்தின் பெருந்தூணாய் விளங்கியவர் எங்கள் கேப்டன் விஜயகாந்த்.

அவரது நினைவேந்தல் கூட்டம் வருகிற ஜனவரி 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தென்னிந்திய நடிகர் சங்கம் செய்து வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் அதை நான் ரசிக்க வேண்டும்’ – விஜய் பேசிய பழைய வீடியோ வைரல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here