‘மூன்று ஆண்டுகள் கனவை நனவாக்கிய குழுவிற்கு நன்றி’ – ‘ஸ்டார்’ பட இயக்குநர் இளம்..!

0
78

‘Star’: இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். ‘ஸ்டார்’ திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஒரு புதிய அப்டேட் ஒன்றை கூறியிருக்கிறார். அதில், “நேற்று திருப்திகரமான ஒரு வேலை நாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய காட்சி ஒன்றை வெற்றிகரமான படமாக்கினேன்.

இதனை மிகச் சிறப்பான முறையில் எடுப்பதற்கு ஆதரவாக இருந்த என்னுடைய குழுவினர், நடிகர் கவின் ஆகியோருக்கு நன்றி. (குறிப்பு – இடைவேளைக்குப் பிறகான முதல் காட்சி இது)” என குறிப்பிட்டு, படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ‘Vijay 69’ : ‘RRR’ பட தயாரிப்பாளருடன் இணையும் விஜய்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here