கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் புதிய அப்டேட்..!

0
119

இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

‘ஸ்டார்’ திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை அதிதி போஹங்கரின் கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி அதிதி போஹங்கர் ‘ஜிமிக்கி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை போஸ்டர் மூலம் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here