விண்டேஜ் காதலில் கவின்..! வைரலாகும் காதல் பாடல்..!

0
120

‘Star’: இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் ‘ஸ்டார்’ படத்தின் ‘ஸ்டார் இன் தி மேக்கிங்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது ‘ஸ்டார்’ படத்தின் ‘விண்டேஜ் காதல்’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு வருகிறது. தொடர்ந்து படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here