‘STR 48’: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘பத்து தல’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு ‘STR 48’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் ‘STR 48’ படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளது. அதன்படி, ‘STR 48’ படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (பிப்ரவரி 2) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
முன்னதாக இந்த அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.