‘STR 50’ அப்டேட்..! மாஸ் ஹிட் படத்தின் பார்ட் 2.. தானே இயக்கி நடிக்கும் சிம்பு..!

0
61

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘பத்து தல’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘STR 48’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘STR 48’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தனது 50ஆவது திரைப்படத்தை தானே இயக்கப்போவதாக சிம்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு 2004ஆம் ஆண்டு வெளியான ‘மன்மதன்’ என்கின்ற திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்பு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதுதான் அவருடைய ஐம்பதாவது திரைப்படமாக அமையும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், தற்போது அவர் நடித்து வரும் STR 48ஆவது திரைப்படமும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வைரலாகும் ‘லால் சலாம்’ Thalaivar Swag பாடல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here